தமிழக முதல்வரும், திமு க. தலைவருமான கருணாநிதியைக் கொச்சைப்படுத்தி, ஆனந்த விகடனில், பத்திரிகையாளர் ஞாநியின் "விருப்பப்படி இருக்க விடுங்கள்" என்ற தலைப்பில் எழுதியதை அனைத்துத் தரபினரும் கண்டித்துள்ளனர்।இதனிடையே, ஞாநியின் அநாகரீகமான எழுத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். 'தீம்புனல்' சார்பில் சென்னை வாணி மகாலில் 20.10.07 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 10 மணிவரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கவிஞர் இளையபாரதி வரவேற்று பேசினார். கவிஞர் தமிழச்சி முகவுரை ஆற்றினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கவிஞர் அறிவுமதி, கவிஞர் கரிகாலன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் சல்மா, எழுத்தாளர் இமயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு, தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் பிரபஞசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறையன்பன் குத்தூஸ் சிறப்புப் பாடல் பாடினார்.
கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.... இதோ விமர்சனங்கள்.......
முகப்புரைக்கேற்ற - தமிழச்சி
தனி மனிதக் கண்டனக் கூட்டம் தேவை தானா ! என நாங்கள் நினைத்த பொழுது- புரிந்தும் புரியாமலும்
விளக்கி- நீ என்ன மாமனா மச்சானா என்ற கேள்வியோடு முடித்து கொண்டார்
தொரப்பாடி ஜெயிலுக்குள்ளே! - அறிவுமதி
பாவம் பெரியாரின் முகத்தைப் பெரியவரிடம்
காண்கிறார்! - சரி இருக்கட்டும்
தொண்ணூற்று மூன்றாம் வயதிலும் போராடிய பெரியாரின் தியாகத்தை - நினைத்து
கம்முகிரார்! விம்முகிறார்!- ஆனால் வெளிவரும் கண்ணீர் பெரியவருக்காக?- என வைத்துக்கொள்வோம்!
உணர்ச்சி வசப்படுதல் என்பது - தற்காலிகமானது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?
பேராசிரியர் அ.மார்க்ஸ் பேச்சு அக்மார்க்
பெரியவர் புராணம் இல்லை
ஞாநியின் வஞ்ச இகழ்ச்சியினை
தெளிவு பெற எடுத்துக்காட்டி
கனிமொழியிடம் சில கேள்விகளையும்
தொடுத்து- மொழியின் மவுனததைக் கலைக்க வேண்டுமெனக் கூறி கலகலத்தார் - நாங்களுந்தான்
பிழைக்கக் கற்று கொண்ட - ரவிக்குமார்
பெரியாரையே பழித்த பெரியவர் இவர்?- ஆக பெரியவர் புராணத்தையும் படிகத்தவறவில்லை அக மகிழ்ந்தார்! புகழ்ந்தார்! ஆர்ப்பரித்தார்- பிறகு நாட்டையே மாற்றும் வண்ணப் பெட்டியைக் கொடுப்பவரல்லவா!
தமிழகப் பெரியவர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தவரல்லவா- நடைமுறைப்படுத்தாமல் பேசாமல் நீவிர் பெரியவர் கழகத்திலேயே தஞ்சம் அடையலாம்!
தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்கிறீரோ
அதுவும் சரிதான்......
வானம் வசப்படும்- பிரபஞ்சதிட்டம்
பெரியார் புராணமும் பாடவில்லை
பெரியவர் புராணமும் இல்லை
சுயப்புராணம் ஒன்றே இவருக்கு தெரிந்தது
ஞாநி யார்? ஞானி யார்?
என்று புரிய வைத்தது இவர் தானாம்
இந்த ஞாநிக்கு அஞ்ஞாநி என்று
பெயர் வைத்ததும் இவர் தானாம் - என்கிறது
இவர் புராணம.
உலகப் பத்திரிகையாளர்-எ.ஸ்.பன்னீர் செல்வம்
ஏனோ இவரிடம் அவாள் வாடை வீசுகின்றது
படிச்சுண்டு! சொல்லிண்டு! கேட்டுண்டு!
ஞாநியை சிவப்பு சட்டைப் போட்டுக்கொண்டு- காவி வார்த்தை பேசாதே என்றார்.
கருத்தில் தெளிவு- ஆனாலும்
இட ஒதுக்கீடு- பகுத்தறிவு போட்ட பிச்சை என்று கொச்சை வார்த்தை பேசிக் காயப்படுத்தினார்।
இவை எல்லாம் இருக்கட்டும்
ஞாநி வார்த்தை கண்டனத்திற்கு உரியதே!
வேட்டியில் மூத்திரம் போய்விட்டதாக
ஓலமிடுகிராயே - முதலில் நீ உன்
கோவணத்தை சுத்தமாக வைத்துக்கொள்
மற்றவரிடம் இருக்கும் பொது நற்குணத்தைப்
பார்க்காமல்- உடற்கோளாரைப் பற்றி
சொல்கிறாயே- இதுதான் அறிந்தும்
அறியாமலும் நீ அறிந்து கொண்டதா.....
உனது பக்கங்கள் ஓ பக்கங்கள் அல்ல!
ஓட்டைப் பக்கங்கள்!
தீம்புனல் படைப்பாளிகள் அமைப்பு
வேதாந்தியிடம் வேதம் கற்கச்
சென்றிருந்ததோ-ஃபத்வாவின் பொழுது
உன் தீ என்ன கனலாக இருந்ததோ! மூடர்களே உங்களுக்குத் தெரியாதா! தீயின் கனல் தான்
பெருந்தீயை உருவாக்குமென்று!- ஓ
அந்த ஆரியத் தீயை இந்தத் தீயால்
எரிக்க முடியாதென்ற அறியாமையோ!!!!!!
Sunday, October 28, 2007
Sunday, October 7, 2007
அம்பேத்கரும் இந்திய அரசியலும்
நாதியற்று நாலாப்பக்கமும்
புழுக்களாய் நெளிந்தவர்களை
வெடிகுண்டு கிடங்காய் மாற்றி
வெடிக்க வைத்த தீக்குச்சி!
அடிமைச் சங்கிலியை
வெட்டி எறிந்த கோடாலி!
உறங்கிக் கிடந்த சேரிகளை
உசுப்பி விட்டவன்!
ஊமைகளைப் பேச வைத்தவன்!
வாழ்வு எங்கே என
வயல் காட்டில் தேடியவர்
முகத்தை தொலைத்து விட்டு
முகவரியைத் தேடியவர்
விதி இதுதான் என்று
மிதியுண்டு கிடந்தவர்கள்
கோபுரத்தை சுமந்து கொண்டு
அடிக்கல்லாய் போனவர்கள்
திசைகள் தெரியாமல்
தினந்தோறும் அழுதவர்கள்
அழுகையைத் துடைக்க
அம்பேத்கர் கரங்கள்!
வீதியில் இறங்காமல்
விதியை நொந்து பயனில்லை
வாருங்கள் என் பின்னால்
போருக்குத் தயாரவோம்!
அம்பேத்கர் பின்னால்
அணி அணியாய் அடிமை சனம்
அடிமைகளின் விடுதலைக்கு
அடிக்கால் நாட்டவே
அம்பேத்கர் எழுதினார்
அரசியல் சாசனம்
அவர் கையில் பேனா இருந்தது அதற்குப் பின்னால் பூணூல் இருந்தது!
பூணூலில் சிக்கியது இந்தியச் சட்டம்
நூல் இருக்கும் திசையில் தானே பேனா செல்லும் சிக்கலை உடைக்க
சட்ட சிக்கல்கள் ஏராளம்
நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
மராத்திய மண்ணில்
மரத்வாடா வையும் எரித்தது
மனம் போன போக்கில்
மக்களையும் எரித்தது
எதிரியிடம் இருந்து
எரி நெருப்பைப் பிடுங்குவோம்!
எரித்த கைகளை- அதில்
முறித்துப் போடுவோம்!
...................... முன்னவன்
புழுக்களாய் நெளிந்தவர்களை
வெடிகுண்டு கிடங்காய் மாற்றி
வெடிக்க வைத்த தீக்குச்சி!
அடிமைச் சங்கிலியை
வெட்டி எறிந்த கோடாலி!
உறங்கிக் கிடந்த சேரிகளை
உசுப்பி விட்டவன்!
ஊமைகளைப் பேச வைத்தவன்!
வாழ்வு எங்கே என
வயல் காட்டில் தேடியவர்
முகத்தை தொலைத்து விட்டு
முகவரியைத் தேடியவர்
விதி இதுதான் என்று
மிதியுண்டு கிடந்தவர்கள்
கோபுரத்தை சுமந்து கொண்டு
அடிக்கல்லாய் போனவர்கள்
திசைகள் தெரியாமல்
தினந்தோறும் அழுதவர்கள்
அழுகையைத் துடைக்க
அம்பேத்கர் கரங்கள்!
வீதியில் இறங்காமல்
விதியை நொந்து பயனில்லை
வாருங்கள் என் பின்னால்
போருக்குத் தயாரவோம்!
அம்பேத்கர் பின்னால்
அணி அணியாய் அடிமை சனம்
அடிமைகளின் விடுதலைக்கு
அடிக்கால் நாட்டவே
அம்பேத்கர் எழுதினார்
அரசியல் சாசனம்
அவர் கையில் பேனா இருந்தது அதற்குப் பின்னால் பூணூல் இருந்தது!
பூணூலில் சிக்கியது இந்தியச் சட்டம்
நூல் இருக்கும் திசையில் தானே பேனா செல்லும் சிக்கலை உடைக்க
சட்ட சிக்கல்கள் ஏராளம்
நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
மராத்திய மண்ணில்
மரத்வாடா வையும் எரித்தது
மனம் போன போக்கில்
மக்களையும் எரித்தது
எதிரியிடம் இருந்து
எரி நெருப்பைப் பிடுங்குவோம்!
எரித்த கைகளை- அதில்
முறித்துப் போடுவோம்!
...................... முன்னவன்
Saturday, October 6, 2007
நான் விடுதலைக் களத்தில்.....
நீ என்னை காயப் படுத்தினால்
வரலாறு ஆகிவிடுவேன்!
நீ என்னை ஏசினால்
சிந்தனையாளன் ஆவேன்!
நீ என்னை அடித்தால்
விழித்துக் கொள்வேன்!
நீ என்னைக் காயப்போட்டால்
கவிதையாகி விடுவேன்!
நீ என்னை பொனமாக்கினால்
தியாகியாக எழுவேன்!
உன்னால் எனக்கொன்றும் அழிவில்லை
உனக்குத்தான் ஏனெனில்
நான் விடுதலைக் களத்தில்.
..........................தலையாரி
Subscribe to:
Posts (Atom)