Saturday, October 6, 2007

நான் விடுதலைக் களத்தில்.....

நீ என்னை காயப் படுத்தினால்

வரலாறு ஆகிவிடுவேன்!

நீ என்னை ஏசினால்

சிந்தனையாளன் ஆவேன்!

நீ என்னை அடித்தால்

விழித்துக் கொள்வேன்!

நீ என்னைக் காயப்போட்டால்

கவிதையாகி விடுவேன்!

நீ என்னை பொனமாக்கினால்

தியாகியாக எழுவேன்!

உன்னால் எனக்கொன்றும் அழிவில்லை

உனக்குத்தான் ஏனெனில்

நான் விடுதலைக் களத்தில்.

..........................தலையாரி

No comments: